தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து சட்டமன்ற தேர்தலுக்கான ஓருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த குழுவில் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்பு செயலாளர் பாரதி, ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்களின் பொறுப்பாளர்கள் பட்டியலை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வௌியிட்டாா்.
இதனையடுத்து பல்வேறு நிகழ்ச்சிக்கு தென் மாவட்டத்திற்கு வருகை தந்த திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மருமகன் சபாீசன் தூத்துக்குடி தனியாா் ேஹாட்டலில் வடக்கு தெற்கு மாவட்ட திமுக நிா்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது கூறுகையில் “திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும். தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்.
ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு தளபதிதான் வேட்பாளர் என்பதை மனதில் வைத்து கொண்டு ஓற்றுமையுடன் அனைவரும் களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது பேசினார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏக்கள் மாா்க்கன்டேயன், சண்முகையா, ஓன்றிய செயலாளா்கள் இளையராஜா, ராமசாமி, சரவணக்குமாா், காசிவிஸ்வநாதன், உள்பட வடக்கு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனா்