தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே விவசாயத்துக்கு பயன்படும் ஆழியார் பழைய பாசன வாய்க்காலை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்தி பாசன விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள பொடாரம்பாளையம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர் பகுதியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார்.

தனசேகர் தனக்கு சொந்தமான தோட்டத்தின் நடுவில் ஏழு சென்ட் பட்டா நிலத்து நடுவில் நீளமாக பாசன வாய்க்கால் அதாவது பிஏபி பாசன வாய்க்கால் சென்று வந்தது. அந்த பாசன வாய்க்காலை தனசேகர் தனது தோட்டத்தை சமன் செய்யும் போது பாசன வாய்க்காலை முற்றிலுமாக அளித்துவிட்டு பாசன வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தி விட்டார்
பின்பு கோவை நெடுஞ்சாலை ஓரம் பட்டா இடத்தை ஒட்டியே சிறிய குழாய் அமைத்து தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்

இது தொடர்பாக பிஏபி பாசன விவசாயிகள் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பாசன வாய்க்காலை மீட்டுத் தர வலியுறுத்தி பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளிக்கும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் பிஏபி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திலிருந்து விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதற்காக பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட உள்ளனர்.

மேலும் தற்போது குண்டடம் பகுதியில் கால்நடைகளுக்கும் பொது மக்களுக்கும் தண்ணீர் இல்லாமல் சிரமம் அடைந்து வரும் நிலையில் தற்போது பாசன வாய்க்காலில் தண்ணீர் வருவது குறிப்பிடத்தக்கது. பாசன விவசாயிகள் ஏற்கனவே இருந்த பாசன வாய்க்காலையும் சரி செய்து தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு ஜேசிபி வாகனத்தை எடுத்து வந்து தோண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் பாசன வாய்க்காலை சமன் செய்த விவசாயி தனசேகர் பாசன வாய்க்காலை சரி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தி வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த பி ஏ பி பாசன விவசாயிகள் தனசேகரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன சம்பவத்தை அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் கொடாரம்பாளையம் மஜாரா முத்தமிழ் நகர் புல எண் 447/27 குண்டடம் பல்லடம் பிரதான சாலையில் உள்ள பி ஏ பி வாய்க்கால் இடமாற்றம் செய்து மூடப்பட்ட மீண்டும் பழைய பி ஏ பி வாய்க்கால் வேண்டுமென மக்கள் முற்றுகையிட்டனர் குண்டடம் பரம்பிக்குளம் ஆழியார் பாசன வசதி திட்டம் குண்டடம் கால்வாயில் பிரியும் புதிய குண்டடம் பகிரமான கால்வாய் சாரகம் 2.86 கிலோ மீட்டர் பிரியும் மூன்று இடது பக்கமான கால்வாய் 0.620 கிலோமீட்டர் பிரியும் நாலாவது இடது கால்வாயானது முதல் மன்றத்தின் பாசனம் பெரும் பாசன பூமியாகும் 447/2 நிலத்தின் வழியாக வரும் குப்பு வாய்க்காலில் இடித்து டாப்புகளை இடித்து வாய்க்காலினை அளித்து ஆக்கிரமித்துள்ளனர் இரும்புக் கம்பியினால் கேட்டுப்போட்டு மூடப்பட்டதை எடுத்து தரச் சொல்லி திறந்த வெளி வாய்க்காலாக எடுத்து தர சொல்லி அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஆக்கிரமித்து ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் உரிமையாளரின் உறவினர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் சிறிது பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *