தேனி மாவட்டம் பெரியகுளம் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ் ஷரா இறையியல் கல்லூரியில் ஒரே நபர், ஒரே நாளில் முழு குர்ஆனையும் மனப்பாடமாக ஓதும் நிகழ்ச்சிநடைபெற்றது.

ஜாமி ஆ வின் மாணவன் சித்தியன்கோட்டை பகுதியைச் சார்ந்த ஹாஃபிழ் முக்ஸித் மீரான் முழு குர்ஆனையும் மனனமாக ஓதினார்.ஜே ஏ எம் இறையியல் கல்லூரி தலைவர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசல் தலைவர் தர்வேஷ் முஹ்யித்தீன்,தேனி மாவட்ட முஸ்லிம் மேம்பாட்டு கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பொன்ராஜ் கொந்தாளம், ஜே.ஏ.எம். இறையியல் கல்லூரி பொருளாளர் அஜுஜுர் ரஹ்மான், முன்னாள் தலைமை இமாம் முஹம்மது அலி, தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை துணைத்தலைவர் அலாவுத்தீன்,மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் துணைத் தலைவர் நிஜாத் ரகுமான், தேனி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் ஆலிம் அஹமது முஸ்தபா,வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் அஹ்மது பெளஜீத்தீன்,உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஜே ஏ எம் இறையியல் கல்லூரி நிறுவனர் மற்றும் முதல்வர் முகமது உசேன் மன்பஈ வரவேற்புரையாற்றினார். மக்கா பள்ளிவாசல் தலைவர் அப்துல் ரகுமான் துவக்க உரையாற்றினார். முஹம்மது மீரான், மீரா மைதீன், முகமது அலி ஜின்னா, முகமது இத்ரிஸ்,உபயத்துல்லாஹ், பீர் முஹம்மது, பக்ருத்தீன் பாக்கர் முஹம்மது அப்துல் காசிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஐக்கிய சமாதான பேரவை பொதுச் செயலாளர் ஏ எம் இறையியல் கல்லூரி நிர்வாகி முஜிபுர் ரஹ்மான் மற்றும் பேராசிரியர் அமீர் தங்கள் சிறப்புரையாற்றினர்.துணை முதல்வர் அப்துல் அஹத் நன்றி உரையாற்றினார்.மதராஸாவில் பேராசிரியர்கள் இறையியல் கல்லூரி நிர்வாகிகள் முபஷ்ஷரா உலமா பேரவையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *