தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று நடைபெற்று வருகிறது அதன்படி ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கம் மாத்திரை அரசு பள்ளி மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஜீன்பாக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி துவக்கி வைத்தார் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கினார் நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பேசுகையில் வருங்கால இந்தியா மாணவர்களின் கையில் தான் உள்ளது

இந்த மாநகராட்சி பள்ளி ஐந்து வருட காலமாக நான் வந்து கொண்டிருக்கிறேன் இந்தப் பள்ளி ஆரம்பத்தில் எப்படி இருந்தது என்று தெரியும் தற்போது கட்டிடங்கள் கட்டப்பட்டு அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது

மைதானத்தில் ஹாலோ பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 661 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் பல்வேறு வசதிகள் தனியார் பள்ளிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மாநகராட்சி பள்ளிகள் தற்போது அனைத்து வசதிகளும் நாம் செய்யப்பட்டுள்ளது

இந்த பள்ளியில் படிப்பது மாணவ மாணவிகளுக்கு எந்த தொந்தரவும் கிடையாது பள்ளி கட்டணம் என்று எதுவும் கிடையாது உங்களுக்கு ஏதாவது புகார் இருந்தால் மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பார்கள் பள்ளி மாணவ மாணவிகள் செய்ய வேண்டியது உங்களுடைய அம்மா அப்பாவுக்கு நிறைய கனவுகள் இருக்கும் அதனை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை நாம் நன்றாக படிக்க வேண்டும் நான் படிக்கின்ற காலத்தில் எனது அம்மா அப்பா படிப்பு முடித்து கல்லூரி வரை படித்துள்ளேன்

நான் படிக்கின்ற காலத்தில் இந்தப் பகுதியில் மணல்மேடு தான் இருக்கும் நல்ல முறையில் மார்க் எடுத்தால் கல்லூரியில் வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல முறையில் கிடைக்கும் உடல் நல ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் எதையும் சாதிக்க முடியும் வருமுன் காப்போம் என்ற எண்ணத்தில் நோய் வருவதற்கு முன்பே நாம் அதனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் சைக்கிள் ஓட்டினால் எந்த விதமான நோயும் நமக்கு வராது உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்படும் சிறிய சிறிய இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகிறோம்

அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் உடல் ஆரோக்கியம் வரும் .மன தைரியம் உருவாகும் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க வேண்டும் நான் மரம் வளர்க்க வேண்டும் என்று கூறினேன் 4வருடம் விறு விறு என்று ஓடிவிட்டது மாநகனர நாம் பசுமையாக்குவோம் கை கால்களை சுத்தமாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மேயர் ஜெகன் கூறினார்

நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா. திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன். திமுக வட்டச் செயலாளர் கதிரேசன். மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *