தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயது குப்பன், ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் சிறிய அளவில் ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து பிழைப்பதற்காக உழைத்து வருகிறார்.

நேற்று இரவு 9 மணி அளவில் கால்நடைகளுக்கு தீவனம் வைத்துவிட்டு, தனது விவசாயப் பண்ணை வீட்டைப் பூட்டி விட்டு சென்றார் அதிகாலை 5 மணிக்கு சென்று பார்த்தபோது, பண்ணை ஓட்டு வீடு முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தது. அதிர்ச்சியடைந்த குப்பன், அருகில் கட்டியிருந்த கால்நடைகளைப் பாதுகாத்து, அக்கம்பக்கக் குடியிருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.


பின்னர் கடத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.மாவட்ட துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.தீவைத்த மர்ம நபர்களை விரைவாகக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *