ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை-ஆற்காடு இணைப்பு பாலாற்று பழைய மேம்பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கனரக மற்றும் அதிக உயமுள்ள வாகனங்கள் செல்லமுடியாதபடி உயர்மட்ட இரும்புத் தடுப்பு (High-level iron barrier) அமைக்கப்பட்டுள்ளது.இந்த உயர்மட்ட இரும்புத் தடுப்பில் சிக்கிய சரக்கு வாகனத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேர போராத்திற்கு பிறகு வாகனம் மீட்கப்பட்டு போக்குவரத்து சிரானது.