போதையில்லா கோவையை உருவாக்க கரம் கோர்ப்போம்-நண்பன் அறக்கட்டளையை துவக்கிய ஸ்ரீதேவி சில்க்ஸ் உரிமையாளர் சிவகணேஷ்
கோவையில் போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் விதமாக,ஸ்ரீதேவி சில்க்ஸ் உரிமையாளர் சிவகணேஷ் நண்பன் அறக்கட்டளை எனும் அமைப்பை துவக்கி உள்ளார் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்து வருகிறது..
தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் உள்ள பகுதியாக உள்ள கோவையில் கடந்த சில நாட்களாக போதை பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது..
மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றனர்..
இந்நிலையில் போதையில்லா கோவையை உருவாக்க பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்பதை நோக்கமாக கொண்டு, காந்திபுரம்,ஸ்ரீதேவி சில்க்ஸ் உரிமையாளர் சிவ கணேஷ் நண்பன் அறக்கட்டளை எனும் அமைப்பை துவக்கி உள்ளார்…
இது குறித்து நண்பன் அறக்கட்டளை தலைவர் சிவ கணேஷ் கூறுகையில்,போதை பழக்கங்களுக்கு அடிமையாக உள்ள இளம் தலைமுறை இளைஞர்களுக்கு இந்த அமைப்பின் வாயிலாக கவுன்சிலிங் வழங்க உள்ளதாகவும்,போதை பொருட்கள் விற்பனை குறித்து எங்கள் கவனத்துக்கு வந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்..
குறிப்பாக போதை சீரழிவில் இருந்து, கோவையை மீட்டெடுக்க போலீசாருடன் இணைந்து செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்…