வால்பாறையில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வில் 162 மாணவர்கள் பங்கேற்றனர்
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வு நடைபெற்றது இத்தேர்வில் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகிய மொத்தம் 19 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் சுமார் 168 மாணவர்களில் 162 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர்
மேலும் இத்தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வழங்கப்படும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கிவரும் நிலையில் மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் தேர்வில் கலந்து கொண்டனர்