பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு பன்னிரு திருமுறை தேவாரம் திருவாசகம் பாடி மச்சபுரிஸ்வரர் கோவிலில் குழந்தைகள் வழிபாடு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தேவராயன்பேட்டையில் எழுந்தருளியிருக்கும் புகுந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மச்சபுரிஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ மச்சபுரீஸ்வரர் அறக்கட்டளை சார்பில்
பன்னிரு திருமுறை தேவாரம் திருவாசகம் குழந்தைகள் பாடல்கள் பாடும் நிகழ்ச்சி ஜனவரி மாதம் தொடங்கி மகா சிவராத்திரி முன்னிட்டு பன்னிரு திருமுறைகள் திருவாசகம் பாடும் நிகழ்ச்சி மச்சபுரிசஸ்வரர் அறக்கட்டளை அமைப்பாளர் சந்திரசேகரன், தலைமையில் நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மச்சபுரீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து பன்னிரு திருமுறை தேவாரம் திருவாசகம் பாடல்கள் பாடி வழிபட்டனர்.
மேலும் எவ்வாறு திருவாசகத் திருமுறைகள் பாடல்கள் பாடிய குழந்தைகளுக்கு நல்ல கல்வி ,நல்லொழுக்கம், உடல் ஆரோக்கியம் , நட்புணர்வு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பற்றி வகுப்புகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வகுப்பு ஆசிரியர் செந்திலை கண்ணன் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டு தேவார திருவாசகர் திருமுறை பாடல்கள் பாடினர்.