விருத்தாசலத்தில் நேற்று நடைபெற்ற பெற்றோரை கொண்டாடுவோம் எனும் முதல்வர் நிகழ்ச்சிக்கு வந்து விட்டு திரும்பிய டாடா ஏசி வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இதில் குப்புசாமி என்பவர் நேற்று உயிரிழந்தார்.

மேலும் முப்பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் ஏற்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான அருன்மொழிதேவன் அரசுமருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

இதில் நகர கழக செயலாளர் சந்திரகுமார், மாநில அம்மா பேரவை கழக துணை செயலாளர் அருளழகன்,வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *