விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் கண்டமங்கலம் அண்ணா திடல் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கண்ணப்பன் தலைமை தாங்கினார்.
மாநில ஆதி திராவிடர் நலக்குழு இணைசெயலாளர் புஷ்பராஜ் வரவேற்றார். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமணன், கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியர் சபாபதி மோகன், மாநில பொறியாளர் அணி செயலாளர் வானூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான எஸ். கே. பி. கருணாநிதி ஆகியோர் சிறப்புறைஆற்றினர்.
கூட்டத்தில் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் சீனு செல்வரங்கம், கணேசன், செல்வமணி, பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம்,
பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், காலை உணவு திட்டம் மேலும் பல்வேறு திட்டங்கள் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகள் விளக்கி கூறப்பட்டது. கூட்டத்தில் திமுக அனைத்து நிலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர் எஸ் வாசன் நன்றி கூறினார்.