சமயநல்லூர்

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரக் கூட்டம் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து பொதுமக்களிடம் பால்விலை மின்சாரகட்டணம் உயர்வு வீட்டு வரி உயர்வு பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு மகளிர் பதிலளிக்கையில் இந்த ஆட்சியில் எங்களுக்கு எந்த திட்டமும் வழங்கவில்லை வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெற்று ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார், தெரிவித்தார் இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், வாடிப்பட்டி காளிதாஸ், கொரியர் கணேசன், நகர செயலாளர் அசோக்குமார்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம்,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மனோகரன்,முன்னாள் கூட்டுறவு துணைத் தலைவர் ராகுல், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார், மற்றும் மகளிரணி சாந்தி,கோட்டைமேடு பாலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *