காஞ்சிபுரம் உமாபதி

தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு பயத்தையும் மன அழு இல்த்தத்தையும் போக்க சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தேர்வு நெருங்கி வரும் நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண் எடுப்பதற்கும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சில மாணவர்கள் தேர்வு பயத்தின் காரணமாக படித்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தேர்வு பயத்தாலும் மன அழுத்தத்தாலும் தேர்ச்சி பெறாமல் இருந்து வரும் நிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேர்வு பயத்தை போக்க புத்துணர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
அந்த வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பல்லவன் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயபெருமாள் போஸ் ஏற்பாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேர்வு பயத்தை போக்கவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் சிறப்பு பயிற்சி முகாம் என்று நடைபெற்றது. இதில் மன அழுத்த பயிற்சி சிறப்பு அலுவலர் கிரிடன்யா கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க சிறப்பு பயிற்சி முகாம் நடத்தினார். இதில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தேர்வின் பொழுது பயத்தை நீக்கி எதிர்கொள்வதற்கும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் அறிவுரைகளை வழங்கி பொழுதுபோக்கு நடனம் பாடல் என விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.