மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார்.ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில் ஆண்டறிக்கை வாசிக்கப் பட்டு பள்ளியின் சிறப்புகள் பட்டியலிடப்பட்டது. விழாவில் பரதம், கவிதை வாசிப்பு, தமிழ் பேச்சு, ஆங்கில உரை, ஆங்கில பாடல்கள், கதை சொல்லல், நாடகம், மாற்றுத் திறனாளி திறமைகள் குறித்த நாடகம், திருக்குறள், சுற்றுச்சூழல் குறித்த உரை, மேற்கத்திய நடனம், சிலம்பம், பறையிசை, சுருள், வாள் சுழற்றல், நடனம், நாட்டிய நாடகம் முதலிய குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் கணேசன், தங்கவேல் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நன்கொடையாளர்கள், கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் ஏகம் பவுண்டேசன் பணியாளர் அன்பரசன் விக்ரம் நர்சிங் கல்லூரி ஆசிரியை சௌமியா, நர்சிங் கல்லூரி மாணவியர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை அனுஷியா, மனோன்மணி, சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா அனுஷியா, சுகுமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.