புழல் அடுத்த மாதனான்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சதீஷ் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 19வது ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளியின் சேர்மன் கே மாடசாமி பாண்டியன் டைரக்டர் எம் சந்தோஷ் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளியின் வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் மேலும் மாணவர்களின் திறவுகளை பற்றியும் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்று எவ்வாறு அரசு பணிகளில் இருக்கின்றார்கள் எனவும் பள்ளியின் முதல்வர் வி எம் தீபா எடுத்துரைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு பாஸ்கரன் மற்றும் ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையாளர் டாக்டர் ஆர் சிவகுமார் ஐபிஎஸ், கலைமாமணி டாக்டர் ஜி மணி லால், விஜய் டிவி பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தி படிப்பில் கவனம் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் காண மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

ஆவடி காவல் மாவட்ட இணை ஆணையாளர் கூறும் போது மாணவ மாணவிகள் பொதுவாக செல்போன் பயன்படுத்தும் முறைகளையும் அறிவை வளர்த்துக் கொள்ள பல நல்ல பொதுவான விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை நன்கு வளர்த்துக் கொண்டு சமுதாயத்தில் சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்வில் சிறந்து விளங்கவும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமியர் முதல் மாணவ மாணவிகளின் கண்கவர் நடனங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.இதில் பள்ளியின் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *