கரூரில் திமுக சார்பில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்திய திணித்து மீண்டும் மொழிப்போர்க்கு நிர்ப்பந்தம் பாசிக பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு திமுக மாணவர்கள் இயக்கங்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு FSO TNசார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்ட தலைவர் சரவண மூர்த்தி தலைமையில் .
நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன். ஆகியோர் கெட் அவுட் மோடி கண்டன கோஷம் எழுப்பினர்.

தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கத்துடனும், ஆதிக்க இந்தியை திணிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களில் பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக மாணவர் அணி அறிவித்தது.அதன்படி, தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யு.ஜி.சி. வரைவுக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்..

டன் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள், இளைஞர் அணி அமைப்பாளர் சக்திவேல், மண்டல குழு தலைவர்கள், மாநகர செயலாளர் கனகராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *