ஸ்போர்ட்ஸ் லேண்ட் தனது இரண்டாவது கிளையை கோவை குனியமுத்தூர் பகுதியில் துவங்கியது..
கோவையில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்போர்ட்ஸ் தொடர்பான பொருட்கள் விற்பனையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல் பட்டு வரும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் தனி முத்திரை பதித்துள்ளது..
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியில் ஸ்போர்ட்ஸ் லேண்ட் தனது இரண்டாவது கிளையை துவங்கி உள்ளது..
இதற்கான துவக்க விழா ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் நவீன் ஜோன் வில்சன்,சஞ்சய் ஜான்சன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நேரு கல்வி குழுமங்களின் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்..
அன்னபூர்ணா ஓட்டல் எதிரே துவங்கி உள்ள புதிய கிளை நவீன மயமாக்கப்பட்ட வசதிகளுடன் விளையாட்டு தொடர்பான உபகரணங்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் வகையில் விசாலாமான இடத்துடன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..
இது குறித்து ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிர்வாக இயக்குனர் நவீன் கூறுகையில்,
இங்கு கிரிக்கெட், கால்பந்து,ஹாக்கி,பேஸ்பால் , கூடைப்பந்து , டென்னிஸ் போன்ற அனைத்து விதமான விளையாட்டுகளுக்கு தேவையான பொருட்கள்,பாதுகாப்பு சாதனங்கள்,ஆடைகள்,உடற்பயிற்சி சாதனங்கள்,
டிராபிக்கள்,என அனைத்து விதமான விளையாட்டு தொடர்பான உபகரணங்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் புதிய ஸ்போர்ட்ஸ் லேண்ட் கிளை துவங்கப்பட்டுள்ளது…
திறப்பு விழா சலுகையாக முதல் ஏழு நாட்கள் ஏராளமான ஆபர்கள் வழங்குவதாக தெரிவித்தார்..