சின்னமனூர் சிவகாமியம்மன் கோவில் மஹா சிவராத்திரி திருவிழா தேனி மாவட்டம் செப்பேடு புகழ் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலில் மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

இது குறித்து கோவில் செயல் அலுவலர் அ. நதியா கூறும்போது இந்த சிவாலயம் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததாகும் உயர்ந்த சிவஸ்தலம் எதுஎன்று கேட்ட நைமி சாரண்யா முனிவர்களுக்கு சுதமா முனிவர் பதினெண் புராணங்களில் ஒன்றான கந்தபுராணத்தில் சங்கர சங்கிதையில் கூறிய சிவத்தலங்களில் சிறந்த தளம் பூலாவனமாகும் என்று பூலாநந்தீசுவரர் கோவில் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புதன்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை 7 மணிக்கு தொடங்கி இரவு முழுவதும் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற உள்ளன மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முதல் காலை 6 மணி வரை நடை திறக்கப்பட்டு சிவகாமி யம்மன் உடனுறை பூலாநந்ததீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்படும் இந்த மகா சிவராத்திரி விழாவில் ஆன்மீக பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்

மேலும் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 5 மணி முதலே தொடர்ந்து ஆன்மீக பக்தர்கள் குறிப்பாக தாய்மார்கள் கோவிலுக்கு வந்து சிவகாமி யம்மன் உடனுறை அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை மனம் உருக வணங்கி சிறப்பு வழிபாடுகள் செய்து அம்மன் அருள் பெற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *