ராமநாதபுரம் உயிர் உர உற்பத்தி மையத்தில் விவசாயகல்லூரி மாணவர்களுக்கு செயல்முறைபயிற்சி நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி ( RAWE ) மூலம் கிராமங்களில் தங்கி விவசாயி மக்களிடம் தங்களின் பயிர் சாகுபடி முறை பற்றியும் அவர்கள் விவசாயத்தில் ஏற்படும் இன்னல்கள் பற்றி அறிந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், வேளாண் மாணவர்கள் இராமநாதபுரத்தில் அமைந்துள்ள உயிர் உரங்களை உற்பத்தி மையத்திற்கு சென்று அங்கு உற்பத்தி செய்யப்படும் உயிர் உரங்களான பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகியவற்றின் உற்பத்தி முறை பற்றியும் பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு விநியோகம் பற்றி அறிந்து கொண்டார். இதன் உற்பத்தி, விநியோகம், மற்றும் அவற்றின் விவசாய பயன்பாட்டை உயிர் உரங்களை உற்பத்தி மைய அலுவலர் பரத் மாணவர்கள் விளக்கினார்.