தஞ்சாவூர்,. தஞ்சாவூர், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன் 1000 முதல்வர் மருத்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாகதொடங்கி வைத்தார்கள்.

இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 32 மருந்தகங்களில் தஞ்சாவூர் வட்டத்தில் 8 மருந்தகமும், பூதலூர் வட்டத்தில் 1 மருந்தகமும், திருவையாறு வட்டத்தில் 1 மருந்தகமும், கும்பகோணம் வட்டத்தில் 3 மருந்தகமும், பாபநாசம் வட்டத்தில் 3 மருந்தகமும், திருவிடைமருதூர் வட்டத்தில் 4 மருந்தகமும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 7 மருந்தகமும், மதுக்கூர் வட்டத்தில் 2 மருந்தகமும், பேராவூரணி வட்டத்தில் 3 மருந்தகமும் ஆக மொத்தம் 32 மருந்தகங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தத்தில் டிப்ளமோ பார்மஸி படித்தவர்கள் தனியாக தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக உருவாகலாம். கூட்டுறவு சங்கத்தின் சார்பில் 75 சதவீதம் சலுகை விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1300க்கு விற்ற மருந்துகள் ரூ.300 க்கு கிடைக்கிறது. ஏழை எளியோர். இருதயநோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இம்மருந்துகள் மிகவும் பயனளிக்கும்.

தஞ்சாவூர் மாவட்டம் கலைஞர் நகரில் செயல்படும் தனிநபர் தொழில்முனைவோரால் நடத்தப்படும் முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.அரவிந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வி.தமிழ்நங்கை மற்றும் தொழில்முனைவோர் ஏ.எம்.ஆர்.விக்னேஸ் குமார் ராஜா உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *