கூடலூர் அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன் பட்டியில் புதிய ரேஷன் கடையை ஆண்டிபட்டி எம்எல்ஏ ஆ. மகாராஜன் திறந்து வைத்தார்

கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளப்பகவுண்டன்பட்டியில் செயல்பட்டு வந்த ரேஷன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது இதை யடுத்து குள்ளப்பன் கவுண்டன்பட்டி கிராம ஊராட்சி பொதுமக்கள் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பகுதி என்பதால் அத் தொகுதி எம்எல்ஏ ஆ. மகாராஜானிடம் ரேஷன் கடைக்கான புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என எம்எல்ஏ ஆ. மகாராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்

இந்த மனுவை கனிவுடன் பரிசலீத்த எம் எல் ஏ தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தும் இந்த பணி விரைவில் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென ஒப்பந்ததாரிடம் உத்தரவிட்டார்

இதனைத்தொடர்ந்து புதிய ரேஷன் கடை கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது இந்த புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம் எல் ஏ மகாராஜன் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் கிளை கழக செயலாளர் குணசேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கோபி கருப்பையா முருகன் மற்றும் திமுக ஒன்றிய மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் அரசு ஒப்பந்ததாரர் மணிகண்டன் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *