செங்கல்பட்டு மாவட்டமம் அச்சிறுபாக்கம் ஒன்றியம் கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் இந்திய அறிவியல் விஞ்ஞானி டாக்டர் சர்.சி.வி. ராமன் அவர்களை போற்றும் விதமாக தலைமை ஆசிரியர்
ஸ்ரீதரன் தலைமையில் விழாகொண்டாடப்பட்டது.
இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் வார்டு உறுப்பினர் ஆகியோர் டாக்டர்.சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்து சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டு அனைருக்கும் வழங்கப்பட்டது. மேலும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர். மேலும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் ஆவார்.