பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் இருசக்கர வாகனத்தில் கத்தி அரிவாள் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது…
5பவுன் தங்க செயின்,1/2பவுன் தோடு போலீசாரால் மீட்பு……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் இரவு நேரத்தில் கணவன் மனைவி குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை அடையாள தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து முகத்தில் மாஸ்க் அணிந்தவாறு மூன்று நபர்கள் வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியை காட்டி 5 பவுன் தங்க செயின்,1/2 பவுன் தங்க தோடு ஆகிய நகைகளை மிரட்டி பருத்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அம்மாபேட்டை காவல் துறை விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பாபநாசம் துணைக்காவல் கண்காணிப்பாளர் முருகவேல் , அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் இளவரசு மேற்பார்வையில் பாபநாசம் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசாரான விஜயகுமார் ,குமார், பிரபாகரன் ,சந்தோஷ், வினோத்குமார் ஆகியோர் அம்மாபேட்டை முதல் திருநெல்வேலி வரை உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தென்காசி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அருள்குமார் .வயது- 23, சுரேஷ்குமார் .வயது -35,மகேந்திரன்.வயது- 24, ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட நகைகளை கைப்பற்றியும், மேலும் அவர்கள் வழிபடுத்தி பயன்படுத்திய கத்தி அரிவாள் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.
குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவலர்களுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.