பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்

பாபநாசத்தில் காலையில் கல்லூரி முதல்வர் வேலை, மாலையில் வீடுகளுக்கு சென்று எலக்ட்ரீசியன் வேலை செய்யும் முனைவர் பட்டதாரி ஆசிரியர் பற்றிய செய்தி தொகுப்பு…..
அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு
கல்வி பக்குவத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் முனைவர் பட்டதாரி…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கழுமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மில்டன் ராஜ் வயது -43 .இவர் உளவியல் துறையில் முனைவர் பட்டம் பட்டதாரி ஆவார்.
இவர் அய்யம்பேட்டையில் உள்ள தனியார் கல்வியல் கல்லூரியில் கல்லூரி முதல்வராக பணிபுரிந்து வருகிறார்.மேலும் நாட்டு நலப்பணி திட்டத்தில் கல்லூரி அளவிலும்,
பல்கலைக்கழகம் அளவிலும் பல்வேறு பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்றுக் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் அவர் காலையில் கல்லூரி முதல்வராக பணிபுரிந்து வருவதோடு மாலையில் வீடு மற்றும் தொழிற்சாலையில் உள்ள மின்சாதன பொருட்கள், பழுதடைந்தால் எலக்ட்ரிஷன் வேலை செய்து வருவார்.
கல்வியில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் உளவியல் துறையில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக கல்வியில் மட்டுமல்லாமல் சுயதொழிலை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என ஒரு நம்பிக்கை ஊட்டும் முனிவர் பட்டம் பெற்ற மாணவராக திகழ்ந்து வருகிறார்.
என்னை சமூக ஆர்வலர்கள் பல பேர் இவரை பாராட்டி வருவதோடு இவருக்கு முழு ஒத்துழைப்பும் கல்லூரி நிர்வாகமும் சமூகமும் கொடுத்து வருகிறது.