தாராபுரம் செய்தியாளர் பிரபு
9715328420

குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ஈஸ்வரசெட்டி பாளையம், சமுதாயக் கூடத்தில்,106. பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா-அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோ வழங்கினார்.
அதேபோல குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.53 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சி பகுதியை சார்ந்த 106 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்தவராஜ் தலைமையில் பயனாளிகளுக்கு வழங்கினர்.
அதேபோல குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.53 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தனர்.
குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நவனாரி ஊராட்சி, கள்ளிப்பாளையத்தில் நீர்வளத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.7.57 கோடி மதிப்பீட்டில் உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி, நவனாரி ஊராட்சி, கள்ளிப்பாளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் காசிலிங்கம்பாளையம் முதல் நிராயூர் சாலை வரையிலும், ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் மானூர்பாளையம்- கருப்பட்டிபாளையம் சாலை முதல் தொட்டியன்துறை வரையிலும் சாலை மேம்படுத்தும் பணி என மொத்தம் ரூ.10.53 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் .ஃபெலிக்ஸ் ராஜா திருப்பூர் மாநகராட்சி 4- மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,
குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், செந்தில் குமார், சடையபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன்.மற்றும் கண்காணிப்பு பொறியாளர் (நீர்வளத்துறை) கார்த்திகேயன், செயற்பொறியாளர் மகேந்திரன், தாராபுரம் வட்டாட்சியர் திரவியம், உதவி பொறியாளர் பாபு, இளநிலைப் பொறியாளர் விஜயசேகர் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.