செங்குன்றம் செய்தியாளர்
ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பி.பாலாஜி மாதவரம் அடுத்த பால்பண்ணை காவல் நிலையதில் உள்ள துணை ஆணையாளர் அலுவலகத்தில் புதியதாக பதவி ஏற்றுக்கொண்டார்.
செய்தியாளர்களிடம் துணை ஆணையாளர் கூறும் போது,
செங்குன்றம் காவல் மாவட்டத்தில்,குற்றங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறையின் சார்பில் ஆளுநர்களுக்கு பல அறிவுரைகள் வழங்கியும் குற்றங்களை குறைக்கவும் , சமூக விரோதிகள், கட்டப்பஞ்சாயத்து, பாலியல் துன்புறுத்தல் , பெண் வன்கொடுமைகளை தடுக்கவும் போலீசார் முயற்சி மேற்கொண்டு
குற்றம் நிகழாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் , மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொண்டு, அவர்கள் இரும்பு கரங்களால் ஒடுக்கப்படுவார்கள் எனவும் , , சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டாஸ் சட்டத்தில் கைது நடவடிக்கை தொடரும் என தெரிவித்தார்.