தேனி மாவட்ட தொழிலாளர் துறையுடன் இணைந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியை தேனி மாவட்ட வட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்தும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் பலகையில் இயக்கம் கையெழுத்திட்டு கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புக்கான தங்கள் ஆதரவை முழு மனதுடன் தெரிவித்தனர்

இதனைத் தொடர்ந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட விழிப்புணர்வு மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட அமர்வு நீதிபதி ஜி
அனுராதா கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஸ்ரீதேவி அமர்வு நீதிபதி பி. கணேசன் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஜி.என். சரவணக்குமார் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆலோசனை குழு செயலாளர் சார்பு நீதிபதி எம் பரமேஸ்வரி சார்பு நீதிபதி ஆர் கீதா மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ் அலெக்ஸ்ராஜ் நீதித்துறை நடுவர் நீதிபதி டி ஜெயபாரதி தேனி மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் போடிநாயக்கனூர் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தேனி மாவட்ட தொழிலாளர் துறை அலுவலர்கள் காவல்துறையினர் தேனி வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சட்டம் சார் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *