தூத்துக்குடி மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழகத்தில் முதலமைச்சா் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை செய்துள்ளாா். அதற்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனா். 12 ஆண்டுகள் மோடி அரசு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு தொடர்ந்து தமிழா்களையும் தமிழ்நாட்டையும் திட்டமிட்டு புறக்கணித்து வருகின்றனா்.
தமிழகத்திலிருந்து மட்டும் ஜிஎஸ்டி மூலம் ஆண்டுக்கு ஓரு லட்சத்து 20 ஆயிரம் கோடி கிடைக்கிறது. அதில் பாதி நமக்கு தரவேண்டும் அதை வழங்குவதில்லை. தமிழகத்தில் தென்னகரயில்வே துறை மூலம் 5000 கோடி வருமானம் கிடைக்கிறது.
தூத்துக்குடி துறைமுகம் மூலம் 600 கோடி சென்னை துறைமுகம் மூலம் 100 கோடி கிடைக்கும் கந்து வட்டி வசூலிப்பது போல் டோல்கேட் மூலம் 5000 கோடி வசூல் இப்படி பல்வேறு வகையில் தமிழ்நாட்டிலிருந்து வருமானங்களை யெல்லாம் பெற்றுக்கொண்டு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கு நாம் சாியான பாடம் கற்பிக்க வேண்டும். தொடர்ந்து எம்பி எம்.எல்.ஏ என இரண்டு தோ்தல்களில் பாடம் புகட்டிவிட்டோம். ஹிந்தி மொழியை கட்டாயம் திணிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கல்விக்கான நிதியை தரவில்லை தமிழகத்தின் கல்விதரத்தை சீர்குலைக்க முயற்சி கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா ஓபிஎஸ், எடப்பாடி அடிமை ஆட்சி மீண்டும் பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு வலம் வர நிணைக்கின்றன. அதற்கு நாம் இடம் அளிக்க கூடாது உலகம் முழுவதும் உள்ள தமிழன் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டான். ஆன்மீகத்தில் பல குளறுபடிகளை ஏற்படுத்தி வருகின்றனா்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ ஆட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு தமிழ்மொழி பாதுகாக்கப்பட வேண்டும். சிலா் விஜய் ரூம்பில் இருந்து கொண்டு அரசியல் செய்வதும் அதிமுக அடகு வைத்து கொண்டு நம்மை விமா்சனம் செய்வதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 18 கட்சிகள் கூட்டணியில் இருப்பது மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் நமக்கு முழுமையான ஆதரவை அளித்து வருகின்றனா்.
தமிழகம் முழுவதும் ஓவ்வொரு மாவட்டத்திற்கும் தகுந்தாற்போல் தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பு வழங்கி வருகிறாா். முதலமைச்சா் வடமாநிலத்தில் நச்சலைட்டுகள் தொந்தரவு அதிகம் உண்டு தமிழகத்தில் இருப்பதை போல் சுதந்திரம் இருக்காது. வரும் 2026 சட்டமன்ற தோ்தலில் எந்த நிதியும் வழங்காத ஒன்றிய பிஜேபியோடு கூட்டு சோ்ந்து வரும் அதிமுக கூட்டணிக்கு 234 தொகுதிகளிலும் மூட்டை, என்ற ஜீரோ நிலையை உருவாக்குவோம் அதை தான் பாிசாக அளிக்க வேண்டும். தமிழன் தலை குனிய மாட்டான் தலை நிமிா்ந்து நடப்பான் என்று பாடம் புகட்டுவோம் என்று பேசினாா்.