திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தனியார் பள்ளியில் 43 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.
இந்த விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் தாமு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்வு நடத்துகிறார்கள் இவர்கள் எழுதும் தேர்வு தாள்களை வேறு ஆசிரியர்கள் திருத்துவார்கள் பொதுவா ஆசிரியர்கள் வந்து திருத்துவார்கள் எல்.கே.ஜி முதல் 14 ஆண்டுகள் மாணவன் சாதனை செய்து போட்டி தேர்வாகி வருகிறான்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மேற்படிப்பிற்கான தகுதி தேர்வு தான் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதும் போது அச்சத்தை தவிர்க்க வேண்டும் பெற்றோர்கள் மாணவர்களை எப்படி கரை சேர்ப்பது என்பதற்கான விழிப்புணர்வு குறித்து அப்துல் கலாம் சார் பார்முலாவை ஷேர் செய்தேன் மாணவர்கள் தேர்வு எழுதும் போது யூடிப், பேஸ்புக் செல்போன் , டிவி விரதம் உள்ளிட்ட முகநூல்கள் விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
நேரம் என்பது மாணவர்களின் சொத்து நேரத்தை பயன்படுத்தி மாணவர்கள் உழைப்பை சம்பாதிக்க வேண்டும் ஒழுங்காக இருந்தால் மாணவர்களுக்கான மரியாதை உயரும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி அறிவித்த நான் முதல்வன் திட்டம் தொடர வேண்டும்.
இந்த திட்டத்தை நான் மிகுந்து பாராட்டுகிறேன் நான் முதல்வன் திட்டத்தின் தலைப்பு நான் தான் முதன்மையானவன் என்பதை குறிக்கிறது மாணவர் சமுதாயத்தை இன்று உற்சாகப்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே பிரதிபளிக்க வைக்கிற திட்டம் தான் நான் முதல்வன் திட்டம் அந்தத் திட்டத்தை ஒரு மிகப்பெரிய விருதா தான் பார்க்கிறேன்.
இந்த திட்டத்தை நான் பாராட்டுகிறேன் எனது நண்பரின் ஜனநாயகன் படம் விரைவில் வெளியிட வேண்டும் தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் ஈட்ட வேண்டும் மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் என் நண்பன் விஜய்க்கு ஆரம்பத்திலேயே இளையதளபதி என்ற தலைப்பை அவரது அப்பா தான் கொடுத்தார் சினிமாவிற்காக கொடுத்த இளைய தளபதி தலைப்பு இன்று அது தளபதியாக மாறி மக்கள்களால் அலங்கரிக்கப்படுகிறது.
அது ரசிகர்களால் ரசிகர்களுடைய பெற்றோர்கள் முன்னாள் தலைமுறை இனி வரும் தலைமுறைக்கு எல்லாம் அரசியல் ஆளுமையை காட்டுவதற்காக அரசியலில் இறங்கி உள்ளது அதை சிறப்பாக செய்வார்.
அதற்கான ஆற்றல் அவருக்கு கிடைக்க வேண்டும் என்று நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.