மதுரை ரிங் ரோட்டில் லோடு வேன் மீது தனியார் பஸ், மோதி விபத்து

மதுரை ரிங்ரோட்டில் சாலையோரம் பழுதாகி நிறுத்தியிருந்த வேன் மீது வேகமாக வந்த தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். இதில் காயமடைந்த 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிருந்து தனியார் பஸ் மதுரை மாட்டுத்தாவணி நோக்கி வந்தது. இந்த பஸ், மதுரை ரிங் ரோட்டில் விரகனூர் ரவுண்டானா அருகே தனியார் பஸ் வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரை சேர்ந்த பெர்க்மான்ஸ் மனைவி செல்வி (50) உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார். மேலும் பஸ்சில் பயணம் செய்த 12 பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த பஸ்சின் மீது பின்னால் வந்த காரும் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் வந்த இருவர் லேசான காயமடைந்தனர். விபத்து காரணமாக ரிங் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தெப்பக்குளம் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பஸ்சின் படிக்கட்டு உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்ததால் தால் உள்ளே சிக்கியிருந்த பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து பொக்லைன் இயந்திரம் வரழைக்கப்பட்டு, சேதமடைந்த பகுதிகளை பிரித்த பிறகு, பஸ்சில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் படுகாயமடைந்த 12 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த விபத்து குறித்து தெப்பக்குளம் போக் குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *