தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் ஈஸ்வர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில் மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஈஸ்வர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளி கரெஸ்பாண்டெண்ட் ஆடிட்டர் வெங்கடேஷ், தலைமை ஆசிரியர் கனகவல்லி,ஆகியோர் தலைமை தாங்கினார். கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்க பொருப்பாளர். லயன்குமார், செயலாளர் லயன் கணேசன் ,சங்கம் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக சாசன தலைவர் லயன் ரவி கலந்துகொண்டு சுமார் 75 பேர் குறையுடைய மாணவ, மாணவிகளுக்கு எவர்சில்வர் தட்டு 20,பேஷன் 2, டம்ளர் 21, ஜக்கு 2, கரண்டி 2, அன்ன சட்டி 2 ,எவர்சிலர் வாளி 2, பால் குண்டான் 1,டீ கேன் 1 , மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
விழாவில் வள்ளலார் சங்க உறுப்பினர் லயன் ஏசுராஜ் ,மற்றும பள்ளி ஆசிரியர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.