இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர் ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்
திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவலில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் அருளிய பாடல் பெற்ற ஸ்தலமான அருள்மிகு மங்களாம்பிகை சமேத நெல்லிவனநாதர் ஆலயத்தில் புதியதாக தேர் செய்யப்பட்டு சுமார் 75 வருடங்களுக்குப் பிறகு சிறப்பு யாகங்கள் பூஜைகள் நடத்தப்பட்டு திருத்தேருக்கு கலசாபிஷேகம் நடைபெற்று பிறகு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்கள் வடம்பிடித்து திருத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார்.
மேலும் ஒன்றிய கழக செயலாளர் தேவா தக்கர் சிவா செயல் அலுவலர் சிங்கார வடிவேலு மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.