பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காலாவதியான உணவுப்பொருட்கள், திண்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்படுகின்றன இதற்காக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பலமுறை தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் ஹமர்தீன், மாவட்டப் பொருளாளர் ஜஸ்டிஸ் கோபிநாத் ஆகியோர் தலைமையில், மாவட்ட செய்தித்தொடர்பாளர் சத்தியசீலன் ஒருங்கிணைப்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் இணைந்து”உறங்கும் உணவுப்பாதுகாப்புத்துறை”* என்ற வாசகத்துடன் தொட்டிலில் தூங்குவது போன்ற நூதன முறையில் மற்றும் காலாவதியான திண்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களுடன் 5-மனுக்களை அளித்தனர். நிகழ்வில் தொகுதிப் பொறுப்பாளர்களான சிவா, சதிஷ்குமார், அஜீத்குமார், ஜெயபிரகாஷ் மற்றும் மாவட்ட குருதிக்கொடைப் பாசறை செயலாளர் விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர்.