கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதை கண்டித்தும் திமுக அரசை கண்டித்து சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல மற்றும் பர்கூர் தெற்கு மண்டல இணைந்து போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பில் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாஜக போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தின் போது சுப்பிரமணியன் அரசு தொடர்பு பிரிவு மு.மாவட்ட தலைவர் தருமன் அகிலன் சகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அப்போது போச்சம்பள்ளி காவல்துறையினர் வேனில் ஏற்றியதாலும் பாஜக நிர்வாகிகளை கைது செய்தனர் இதனால் நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.