விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோயில் யூனியன் பணிதிவயல் கிராமத்தில் வேளாண் உதவி இயக்குநர்.பானுபிரகாஷ் தலைமையில் PKVY திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை மற்றும் அதன் முக்கியத்துவ பயிற்சி நடைபெற்றது.
கல்லூரி மாணவிகள் பசுந்தலை மற்றும் பசுந்தாள் உறமிடுதல் பற்றிய விழிப்புணர்வுவை விவசாயிகளுக்கு அளித்தனர். இதில் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் மேலும் இயற்கை விவசாயத்தை விவசாயிகள் ஆர்வமுடன் கை கொள்வதற்கு இத்திட்டத்தின் கீழ் இரண்டு விவசாயிகளுக்கு இருபது கிலோ அளவிலான தக்கை பூண்டு விதை கொடுக்கப்பட்டது.