மாவட்டம் தோறும் கலைஞர் நூலகம், அறிவுசார்மையம். முதல்வர் பரிசீலிக்க ஆயக்குடி மரத்தடி மையம் கோரிக்கை!.
தமிழக முதல்வர் திருச்சியில் ரூ.290 கோடியில் கலைஞர் நூலகம்,அறிவுசார் மையம் அமைக்க 21/3/2025 அன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். அதே போல் ஏற்கனவே மதுரையில் அற்புதமான கலைஞர் நூலகம்,அறிவு சார் மையம் அமைக்கபட்டுள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ,மாணவிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் இது போன்ற மையங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. பெருநகரங்களில் இவை அமைக்கபடுவது வரவேற்க தக்கதே. இதை விரிவு படுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த ஆட்சியில் கலைஞர் நூலகம்,அறிவுசார் மையம் அமைக்க தமிழக முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும் என ஆயக்குடி மரத்தடி மையம் சார்பில் வேண்டுகிறோம்.