பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளர்கள் தேனி எம்பியிடம் வாழ்த்து
தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளராக முதலக்கம் பட்டியைச் சேர்ந்த வீ. லட்சுமி பிரியா துணை அமைப்பாளர்களாக வட புதுப்பட்டி பிரேமா ஊஞ்சாம்பட்டி வனிதா மேல்மங்கலம் முத்துப்பாக்கியம் தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பங்களாப்பட்டி வீரம்மாள் ஆகியோரை திமுக தலைமை அறிவித்துள்ளது
இந்த நிலையில் புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர்கள் அனைவரும் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களின் அரசியல் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என ஆசியுடன் வாழ்த்து பெற்றனர்.