அரியலூர் அண்ணா சிலை அருகே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் க.சுந்தரமூர்த்தி (ஜாக்டோ), வேல்முருகன் (ஜியோ) ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர் சேக்தாவூத்,
தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கருணாநிதி, வருவாய்த்துறை சங்க மாவட்டத் தலைவர் விக்டோரியா உட்பட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்