பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில், பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் மின்சாரமானது குறைவான மின்னழுத்தம் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும், லாடபுரம் கிராமத்திலுள்ள மகளிர் சுகாதார வளாகங்களை சீர்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்டப் பொருளாளர் ஜஸ்டிஸ் கோபிநாத் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளான மாவட்ட செய்தித்தொடர்பாளர் சத்தியசீலன் மற்றும் தொகுதிப்பொறுப்பாளர்களான தமிழ்ச்செல்வன்,சிவநேசன் , சிவா, அஜீத்குமார், சதீஸ்குமார் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிம் மனுக்களை அளித்தனர்.