செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம்
தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் சார்பில் கேழ்வரகு கூழ் வழங்கி வருகின்றனர்.
தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தல் இளநீர் தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மாநிலத் தலைவர் ஜி.முனுசாமி ஆலோசனைப்படி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் மாவட்ட செயலாளர் ஆசிரியர் து.தனசேகரன் தலைமையில் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் இரவு பகல் பாராமல் பணி புரியும் காவல்துறை நண்பர்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்கினர்.
அப்போது காவல் உதவி ஆய்வாளர் மோகன் எழுத்தர் ராஜசேகர் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.