தாய்லாந்தில் நடைபெற்ற மொய்த்தாய் என்று அழைக்கப்படும் கிக் பாக்ஸிங் போட்டியில் 80 கிலோ பிரிவில் வெள்ளி வென்று அசத்திய சென்னை மாணவனுக்கு உற்சாக வரவேற்பு
தாய்லாந்து நாட்டில் ஐந்தாவது முய்தாய் கிக் பாக்ஸிங் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது, இதில் இந்தியா,அமெரிக்கா,இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 1500 வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இதில் இந்தியா சார்பாக 35 நபர்கள் கலந்து கொண்டோம்,
இந்தியா சார்பாக தமிழகத்திலிருந்து பங்கேற்ற ருத்ரேஸ்வரன் வெள்ளி பதக்கம் வென்று சென்னை திரும்பிய போது செய்தியாளர்களை சந்தித்தார் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த ருத்ரேஷ்வரன் 3 1/2 வருடங்களாக இந்த கலையை கற்றுக் கொண்டு வருகிறேன் என்றும் தெரிவித்தார் மேலும் போட்டியில் மிக கடினமாக இருந்ததாகவும் இறுதிப்போட்டியில் தன்னால் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது என்றும் தெரிவித்தார் மேலும் தமிழக அரசு எங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் ஆகியோர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருந்தேன் என்றும் அவர்களிடம் உதவிகள் கேட்க சென்றபோது என்னிடம் நம்பர் மட்டுமே வாங்கிக் கொண்டு திருப்பி அனுப்பி விட்டார்கள் என்றும் தெரிவித்தார் அதனால் அரசு உரிய முறையில் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் உதவினால் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்தார் மேலும் தனக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஆசையையும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.