சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயிலில் இரவு பூச்சாட்டு தலுடன் குண்டம் திருவிழா துவங்குகிறது சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது
இக் கோயிலின் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர் அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா இரவு பூச்சாட்டுத்தலுடன் துவங்க உள்ளது இன்று இரவு படைக்கலம் எடுக்கப்பட்டு மேளதாளங்கள் பீனாட்சி வாத்தியங்களுடன் மாதேஸ்வரர், சருகு மாரியம்மன் வன தேவதைகள் என அனைத்து பரிவார சுவாமிகளுக்கும் பூஜை செய்யப்பட உள்ளது அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் மீண்டும் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்து பூவாரம் கேட்கப்பட உள்ளது அதன் பின்னர் பூச்சாட்டுத்தலுடன்குண்டம் திருவிழா துவங்குகிறது இதற்கான ஏற்பாடுகளை பண்ணாரி கோவில் துணை ஆணையர் மேனகா தலைமையில் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்