ஜே.பி.ஆர்.இல்லத் திருமண வரவேற்பு விழா மணமக்களை திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி.கனிமொழி வாழ்த்தினார்
கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஜே.பி.ஆரின் இல்லத்திருமண விழா நடைபெற்றதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ராமநாதபுரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி மணமக்களை வாழ்த்தினார் இந்நிலையில் ஜே.பி.ஆரின் குடும்பத்தினர் வால்பாறை நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்