C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் மாவட்டம் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு வாகனத்தினை
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

போதை பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற முன்னெடுப்பாக கடலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது,

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முக்கிய நோக்கமாகும். மது அருந்துதலுக்கு மக்கள் அடிமையாகாமல் இருக்கவும், மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்,போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்துவதுடன், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக சமூக விழிப்புணர்வினை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் போதைப் பொருள் பயன்பாடற்ற தமிழ்நாடு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரசுத் துறைகளின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பொது இடங்களில் பொதுமக்களுக்கு ஏற்படுத்திட விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகிறது.


அந்தவகையில் இன்றைய தினம் மது, புகையிலை, கூல்லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தின் மூலம் போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் மரணம், சாலை விபத்து, பொருளாதார சீர்கேடு மற்றும் உடல் உபாதைகள் குறித்து எடுத்துரைக்கும் வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யும் பணி தொடங்கிவைக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், உதவி ஆணையாளர், கலால் ராணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *