கொடைக்கானலில் காட்டேஜ் அதிபர் எரித்து கொலை, ஒருவர் கைது .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சிவராஜ் (60) கடந்த சில தினங்களுக்கு முன்பு காணவில்லை என்று இவரது சகோதரி கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார்
இதைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்
சிவராஜை தனது நண்பர்களும் கொலை செய்து விட்டதாக மதுரை தனியார் மறுவாழ்வு மைய நிர்வாகி இடம் சரணடைந்த வாலிபர் மதுரை தத்தனேரியைச் சேர்ந்த மணிகண்டன் கொடுத்ததகவலின் பெயரில் கொடைக்கானல் நாயுடுபுரம் பெரும்பள்ளம் பகுதியில் பாதி எரிந்த நிலையில் சிவராஜன் உடலை கைப்பற்றி கொடைக்கானல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் நால்வரை கொடைக்கானல் போலீசார் தேடி வருகின்றனர்.