தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15
ஆவது ஆண்டு விழா இக்குழுமத்தின் ஒரு அங்கமான நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது
இந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் தலைவருமான கல்வித்தந்தை டி ராஜ மோகன் தலைமை தாங்கினார் உப தலைவர் பி பி கணேஷ் பொதுச் செயலாளர் எம் எம் ஆனந்தவேல் பொருளாளர் எம் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் செயலாளர் ஏ ராஜ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.கல்லூரியின் செயலாளர் ஏ எஸ் ஆர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கி பேசினார் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜி மதளை சுந்தரம் கல்லூரியின் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்
இந்த ஆண்டு விழாவில் மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டலம் டீன் கே.லிங்கதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்
மேலும் விழாவில் கடந்த 2024 . 2025 கல்வி யாண்டின் சிறந்த மாணவ மாணவிகளாக கட்டிடவியல் துறை மாணவி எஸ்சுவேதா கணிப்பொறி மற்றும் அறிவியல் துறை மாணவர் எஸ் முகிலன் எலக்ட்ரிக்கல் அன்று எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி எம் விஷ்ணுப்பிரியா எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் துறை மாணவி ஆர் சிந்தியா இயந்திரவியல் துறை மாணவர் எம் ஸ்ரீராம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்
இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சி மன்றம் மற்றும் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கும் கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி அவர்களை ஊக்குவித்து மனதார வாழ்த்தி பேசினார்கள்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி வெகு சிறப்பாக பார்வையாளர்களை கவரும் விதமாக வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர் என்.மாதவன் டாக்டர் எம் சத்யா வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் சி . கார்த்திகேயன் ஆண்டு விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் வெனிஸ் குமார் டாக்டர் ஆதி லிங்கம் மற்றும் கல்லூரியின் இருபால் பேராசிரியர்கள் நிகழ்ச்சி பங்கேற்ற அனைவரையும் கனிவுடன் உபசரித்து விழாவை சிறப்பாக செய்திருந்தனர் கல்லூரியின் இணைச்செயலாளர் எஸ் நவீன் ராம் நன்றி கூறினார்