
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் மத்திய ஒன்றியச் செயலாளர் டி.டி.ராதா தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ கவிஞர் கோ.எதிரொலிமணியன் தலைமையிலும், சி.ம.புதூர் மற்றும் தென்தின்னலூர் ஆகிய இடங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் உறுதித்திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்கு தராமல் வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் திரளான மகளிர் பெருமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.