கோவை மாவட்டம் வால்பாறையில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் வரைவு அறிக்கையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வால்பாறை தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்து அந்த ஆர்ப்பாட்டம் வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்திகத்தினரும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கலந்து கொண்ட நிலையில் அதிமுக தொழிற்சங்கம், இந்திய கூட்டணி தொழிற் சங்கங்கள், திமுக நகரக்கழகத்தின் நிர்வாகிகள், த.வெ.க. நகர நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்புகள் கலந்து கொண்ட நிலையில் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு, வால்பாறை வியாபாரிகள் சங்கத்தினர் ஆகியோர் கடையடைப்பு செய்து கலந்து கொண்டனர்
இந்த போராட்டத்தின் போது ஒருசில கடைகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் மசோதாவை ரத்து செய்யும் வரை அடுத்த கட்ட போராட்டம் நடத்தப் போவதாகவும் அதற்கான அறிவிப்பு பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்