நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தமிழக முதல்வரின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட கழகத்தின் பொறுப்பாளர் கே எஸ் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். மகிழ் பிரபாகரன் நன்றி உரையாற்றினார்.

பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற பழமொழிக்கு உதாரணமாக இருக்கக்கூடிய எங்கள் அருமை அண்ணன் கே எஸ் மூர்த்தி மிகவும் எளிமையானவர் அனைவராலும் போற்றக்கூடிய நல்ல மனிதர்.

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் சகோதர சகோதரிகள் மகிழ்ச்சியாக இந்த பொதுக் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார்கள்
பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஆட்சி நம் திராவிட மாடல் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியில் தான் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் தொடர்ந்து தமிழக முதல்வர் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் கழக அரசின் பெண்களுக்கு விடியல் பயணம் ,மகளிர் உரிமைத்தொகை திட்டம், இன்னும் எண்ணற்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தி திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் இந்தியாவை வியக்கக்கூடிய அளவிற்கு நமது தளபதியார் தமிழக முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்

சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி அவசர அவசரமாக டெல்லி சென்றதின் பின்னணி. கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா என்று சொன்னவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கூட்டணி பேசி வந்தது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்றதிலிருந்து இருந்து அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. சில தொகுதிகளில் டெபாசிட்டை அதிமுக இழந்தது தான் மிச்சம்.

அனைத்திந்திய அண்ணா திமுகவிற்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் டெபாசிட் போகும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போவது திராவிட முன்னேற்றக் கழக கலகமும் அதன் கூட்டணி கட்சிகளும் தான். மீண்டும் 2026ல் நமது தளபதியார் தலைமையில் திராவிடமாடல் ஆட்சி தான் தொடரும் என்று தெரிவித்தார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சேர்க்கை அதிகரித்து வருகிறது

இந்த சாதனையை சாதித்து காட்டியவர் நமது தமிழகத்தின் முதலமைச்சர் தளபதியார் என பெருமையாக கூறுவேன் மேலும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து சிறப்புரையை நிறைவு செய்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக துணை செயலாளர்கள் ஒன்றிய கழக செயலாளர்கள் பேரூர் கழகச் செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *