துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வீரபத்திரன் தலைமையில் ஒன்றிய அரசு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்திறாக்கான நிதியை தராததை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க துறையூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கண்ணனூர், சேனப்பநல்லூர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் ,மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சரண்யா மோகன்தாஸ்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், பேச்சாளர் துரை பாண்டியன், அமைப்பாளர் லெனின், கண்ணனூர் குமார், ரவிச்சந்திரன், பாளையம் தமிழ்செல்வன், கலைச்செல்வன், முருகேசன், இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார்,ஆதிதிராவிடர் நல குழு தலைவர் மணிவண்ணன், மற்றும் கழக நிர்வாகிகளுடன் நூறு நாள் வேலை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்